நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்ற தென்னிந்திய கல்லூரிகளுக்கு இடையிலான கைப்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியினை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி துவக்கி வைத்தார்.
பொங்கலை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் மாவட்ட கைப்பந்து கழகம் மற்றும் தனியார் மன்றங்கள் சார்பில் தென்னிந்திய கல்லூரிகளுக்கு இடையிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. லீக் முறையில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் கேரளா, சென்னை, ஈரோடு உள்ளிட்ட 4 கல்லூரி அணிகளும், பெண்கள் பிரிவில் சென்னை மற்றும் கேரள கல்லூரிகளை சேர்ந்த 4 அணிகளும் பங்கேற்று விளையாடின.3 நாட்கள் நடைபெற்ற இந்த தொடரின் இறுதிப்போட்டியை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன் சரஸ்வதி ஆகியோர் துவக்கி வைத்தனர்.விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியின் இறுதி ஆட்டத்தில் பெண்கள் பிரிவில் சென்னை எஸ்.ஆர்.எம் அணியும், ஆண்கள் பிரிவில் கேரளா செயின்ட் பீட்டர் அணியும் முதலிடத்தை பிடித்து ரொக்கப்பரிசினை தட்டிச்சென்றனர்.