துபாயில் நடந்த ASBC asian junior boxing championship 2019 குத்துச்சண்டை போட்டியில் கலந்துக்கொண்டு சென்னையை சேர்ந்த விஸ்வநாத் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.இவரின் வெற்றி குறித்து விஸ்வநாத்தின் பயிற்சியாளர் லோக சந்திரனிடம் நியூஸ் ஜெ இணையக்குழு பேசியதில் விஸ்வநாத்தின் வெற்றிப்பயணத்தை பற்றி பகிர்ந்துக்கொண்டார்.
வாழ்க்கையில் தொடர்ந்து முயற்சி செய்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை நிஜமாக்கி உள்ளார் சென்னையை சேர்ந்த விஸ்வநாத். குழந்தையில் இருந்தே குத்துச்சண்டை மீது அதிகம் ஆர்வம் கொண்டவராய் விஸ்வநாத் இருந்துள்ளார்.இவரின் தந்தையும் சிறுவயதில் குத்துச்சண்டை போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.எனவே மகனின் குத்துச்சண்டை ஆர்வத்தை அறிந்துக்கொண்டு The king makers boxing coaching centre-ல் சேர்த்துவிட்டுள்ளார்.அங்கு சேர்ந்த முதல் நாளிலில் இருந்தே தான் எதையாதவது சாதிக்க வேண்டும் என்று தன் பயிற்சியாளரிடம் கூறி வந்துள்ளார் விஸ்வா.நாளுக்கு நாள் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக ராணுவத்தில் சேர பல்வேறு இடங்களில் நடந்த முகாமில் கலந்துக்கொண்டு போதிய அளவு உயரம் இல்லாததால் நிராகரிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் எந்த இடத்திலும் சிறிதளவும் இலக்கிலிருந்து பின் வாங்காமல் ஓடியுள்ளார்.கடந்த ஆண்டு பூனேவில் உள்ள army sports institute-ல் இந்திய அளவில் நடைப்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் 1,417 போட்டியாளர்கள் கலந்துக்கொண்டு உள்ளனர்.அதில் தேர்வாகிய 6 போட்டியாளர்களில் தென்னிந்தியாவிலிருந்து ஒருவராக விஸ்வா தேர்வாகியுள்ளார்.பின்பு புனேவிலேயே தங்கி கடும் பயிற்சி பெற்ற விஸ்வநாத் இந்த ஆண்டு துபாயில் குஜேரியா என்ற இடத்தில் நடைப்பெற்ற ASBC asian junior boxing championship 2019 குத்துச்சண்டை போட்டியில் கலந்துக்கொண்டு தங்கம் வென்றுள்ளார்.கடந்த 25 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலிருந்து சர்வதேச அளவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் அதிகளவு யாரும் பங்கேற்கவில்லை.ஆனால் விஸ்வநாத் முதல்முறையாக பங்கேற்று தங்கம் வென்று உலக நாடுகளை தமிழ்நாட்டு பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
மேலும் , சர்வதேச அளவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் இந்திய தேசிய கீதம் ஒலிப்பரப்பியது இதுவே முதல்முறை.விஸ்வநாத்தின் வெற்றிப் பயணம் மேலும் தொடர நியூஸ் ஜெ தொலைக்காட்சி சார்பாக வாழ்த்துக்கள்.