அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானியின் உதவியாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, பாஜக சார்பில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்தநிலையில், ஸ்மிருதி இரானியின் உதவியாளராக இருந்து, தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய சுரேந்திர சிங், மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதேபோன்று, மேற்கு வங்க மாநிலம் சக்தாகா பகுதியில் பாஜக இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுகுறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.