அமேதி தொகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட கட்சி நிர்வாகியின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி, அவரது உடலை சுமந்து சென்று அஞ்சலி செலுத்தினார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட ஸ்மிரிதி இரானி 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்தநிலையில், பராலியா கிராமத்தை சேர்ந்த சுரேந்திர சிங் என்ற முன்னாள் கிராம தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஸ்மிரிதி இரானியின் உதவியாளராக இருந்து, தேர்தலில் சிறப்பாக பணியாற்றியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சுரேந்திர சிங்கின் இறுதிச்சடங்கில் ஸ்மிரிதி இரானி கலந்து கொண்டார். சுரேந்திர சிங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அவர், பின்னர் உடலை சுடுகாட்டிற்கு மற்றவர்களுடன் சேர்ந்து சுமந்து சென்றார் . இந்த நிலையில் சுரேந்தர சிங் கொலை தொடர்பாக 6 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.