மின்வாரிய ஊழியர்கள் நேரடியா வீட்டுக்கு போய், மின்சாரத்துக்கான ரீடிங்க கணக்கு எடுக்காம, ஆளில்லாமலேயே மின்பயன்பாட்டை கணக்கெடுக்கிற மாதிரியான ஸ்மார்ட் மீட்டர்கள் இப்போ புழக்கத்துல இருக்குது. தமிழக மின்வாரியத்துலயும் சோதனை அடிப்படையில, சென்னை தி.நகர்ல 130 கோடி ரூபாய் செலவுல 1லட்சத்து 42ஆயிரம் மின் இணைப்புகள்ல ஸ்மார்ட் மீட்டர் பொறுத்தியிருக்காங்க. தனியார வச்சி செஞ்ச இந்தப் பணியில பல்வேறு குழப்படிகள் இருந்ததால திருப்தியில்லனு சொல்லப்படுது. இந்த நிலையில மறுபடியும் தனியார் நிறுவனங்கள்கிட்ட ஸ்மார்ட் மீட்டர் திட்டத்துக்காக ஒப்பந்தப்புள்ளி வாங்கி, நிறுவனங்கள தேர்வு செய்யும் பணி நடந்து வர்றதா சொல்லப்படுது.
மத்திய மின்சார அமைச்சகத்தின் கீழ செயல்படுற எனர்ஜி எபிஷியன்ஸி சர்வீசஸ் லிமிடெட்டும் இந்த மாதிரி ஸ்மார்ட் மீட்டர்கள விற்பனை செய்யுறாங்க. இவங்கக்கிட்ட குறைஞ்ச விலையில ஸ்மார்ட் மீட்டர் கிடைக்கிறதோட , தமிழக மின்வாரியம் எந்த முதலீடும் செய்ய வேண்டாம்… அதே நேரம் பணத்தையும் தவணை முறையிலேயே கொடுக்கலாம்… இப்படி வாய்ப்புகள் இருக்கும்போது ஏன் தனியார் நிறுவனங்கள்கிட்ட ஸ்மார்ட் மீட்டருக்காக ஒப்பந்தப்புள்ளி கேக்கணும்… ஏற்கனவே ஒப்பந்தம் மூலமா வாங்குன மின்மாற்றிகள்ல நூற்றுக்கணக்கானவை பழுதாகி கிடக்குறது திமுகவோட கோல்மால அம்பலமாக்கிட்டு இருக்கு… இப்ப ஸ்மார்ட் மீட்டர்லயும் தனியார் ஒப்பந்தங்கிறது திமுக அதிகார மையங்களோட கல்லாவ நிரப்புறதுக்காகத்தானேன்னு நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.
Discussion about this post