சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களின் கேள்விக்கு தொடர்ச்சியாக பதிலளித்தார்.
செந்தில் பாலாஜி இடம் நடைபெற்று வரும் விசாரணை குறித்த கேள்விக்கு :-
இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பிக்கப் போகிறது, உப்பு தின்னவன் தண்ணீர் குடித்து
தான் ஆக வேண்டும் தப்பு செய்தவன் தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும்,
இந்நிலையில் நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது, இந்த விசாரணையில் பல
திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும், ஸ்டாலினை பொறுத்த வரையில் தூங்க விடாமல் செய்வதாக சொன்னார், அமலாக்கத் துறை விசாரணை தொடங்கப்பட்ட நிலையில் இனி அவர்களுக்கு தூக்கமே இருக்காது.
ஒரு அமைச்சராக இருந்து செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக கூறி அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி உள்ளார், இது தெரிய வந்தவுடன் ஜெயலலிதா அவர்கள் அவரை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தீர்மானங்கள் குறித்த கேள்விக்கு :-
அதிமுக வின் சாதனைகள், திமுக ஆட்சியில் அவள நிலை, அதிகரிக்கும் வெடி குண்டு
கலாச்சாரம், கொலை கொள்ளை என தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் அவல நிலைக் குறித்து தீர்மானத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது
பதவி பணம் அதிகாரம் மட்டுமே திமுக வின் கொள்கை
தற்போது தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீரில் 10 சதவீதம் கூட இன்னும்
கிடைக்கப்பெறவில்லை இதற்காக முதல்வர் ஸ்டாலின் ஒரு கண்டனத்தைக் கூட
அறிவிக்கவில்லை, இதை கேட்க துணிச்சல் உண்டா? 38 அதிமுக எம்பிகள் காவேரி தண்ணீருக்காக போராடினார்கள் தற்போது திமுகவினர்
என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், பதவிக்காக நாங்கள் இல்லை உரிமைக்காக மட்டுமே நாங்கள் உள்ளோம் என தெரிவித்தார்.