மாகராஷ்டிரா மாநிலம் துலே பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் பலியாகினர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த ரசாயன தொழிற்சாலையில் இன்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி கொண்டிருந்தனர். ஆலையில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீ ஆலையை சூழ்ந்தது. தீயில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு படையினர், தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 70க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலைக்குள் சிக்கி இருப்பதால், அவர்கள் மீட்கும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. பேரிடர் மீட்பு படையினர் அங்கு விரைந்துள்ளனர். சிலிண்டர் வெடித்த போது அருகில் உள்ள கிராமங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
Discussion about this post