அதிமுகவின் பொதுக்கூட்டத்தை எதிர்கொள்ள ஸ்டாலின் அரசுக்கு தில் இல்லாத காரணத்தில்தான், சிவகங்கை பொதுக்கூட்டத்திற்கு தடை விதிக்க முயற்சித்தாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கழக இடைக்காலபொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டார். அலைகடலென திரண்டிருந்த கழக தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் பேசிய இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுகவின் பொதுக்கூட்டத்தை எதிர்கொள்ள ஸ்டாலின் அரசுக்கு தில் இல்லாத காரணத்தில்தான், சிவகங்கை பொதுக்கூட்டத்திற்கு தடை விதிக்க முயற்சித்தாக குற்றம்சாட்டினார்.கடந்த வாரம் சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற புரட்சி தலைவியின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தை சுட்டிக்காட்டி பேசிய இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, திமுக கூறிய வாக்குறுதிகளை எல்.இ.டி காட்சி மூலம் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய காரணத்திற்காக, மாவட்ட செயலாளர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக குற்றம்சாட்டினார்.தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை ஒடுக்க, உடைக்க, அழிக்க நினைப்பவர்கள் எவராக இருந்தாலும் அழிந்து போவார்கள் என்று கூறிய இடைக்கால பொதுச் செயலாளர், அதிமுகவில் இருக்கிற தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை அனைவரும் உழைப்பால் உயர்ந்தவர்கள் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
Discussion about this post