சிவகங்கையில் ரூ.70 கோடி மதிப்பில் குடிமராமத்து பணிகள்: ஆட்சியர் ஆய்வு

சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 70 கோடி ரூபாய் மதிப்பில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 110 கண்மாய்களில் நடைபெறும் குடிமராமத்து பணியினை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் நேரில் ஆய்வு செய்தார்.

30 கண்மாய்களில் குடிமராமத்து பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில், மீதமுள்ள 80 கண்மாய்களுக்கான குடிமராமத்து பணியை பத்து நாட்களுக்குள் முழுவதுமாக முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Exit mobile version