சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி விடு புகுந்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கண்ண மங்கலமபட்டியில் தனது மகன்களுடன் வசித்து வரும் தங்கம் என்பவர் அரசு ஆரம்ப தொடக்கப் பள்ளியில் சமையல் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று இருந்தார். பின்னர் வீடு திரும்பிய அவர் கதவு திறக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு 30 சவரன் தங்க நகை மற்றும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து தங்கம் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post