பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராமின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட 19 மொழிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம் பிடித்த வாணி ஜெயராம் சென்னை நுங்கம்பாக்கம் இல்லத்தில் காலமானார்.கலைவாணி என்ற பெயர் கொண்ட வாணி ஜெயராம், வேலூரில் பிறந்தவர். முறைப்படி கர்நாடக இசை பயின்ற அவர் 3 தலைமுறைகளுக்கு பாடலை பாடியுள்ளார். இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே…., மேகமே மேகமே….,ஏழு ஸ்வரங்களுக்குள்…..,வசந்த காலங்கள்….. போன்ற பல்வேறு பிரபலமான பாடல்களை வாணி ஜெயராம் பாடியுள்ளார். உலகம் முழுவதும் பல கச்சேரிகளில் பாடி புகழ் பெற்றவர். சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை 3 முறை பெற்ற வாணி ஜெயராமுக்கு சமீபத்தில் பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. வாணி ஜெயராம் மறைவு திரை உலகினர், ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.