பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம் !

தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட 19 மொழிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம் பிடித்த வாணி ஜெயராம் சென்னை நுங்கம்பாக்கம் இல்லத்தில் காலமானார்.கலைவாணி என்ற பெயர் கொண்ட வாணி ஜெயராம், வேலூரில் பிறந்தவர். முறைப்படி கர்நாடக இசை பயின்றவர்.

ஏன் இந்த ஆனந்தமே…., மேகமே மேகமே….,ஏழு ஸ்வரங்களுக்குள்…..,மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்…….,வசந்த காலங்கள்….. போன்ற பல்வேறு பிரபலமான பாடல்களைப் பாடியுள்ளார்.

உலகம் முழுவதும் பல கச்சேரிகளில் பாடி புகழ் பெற்றவர். 19 மொழிகளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடி சாதனை படைத்துள்ளார் வாணி ஜெயராம். சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை 3 முறை பெற்ற வாணி ஜெயராமின் மறைவு திரை உலகினருக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு. சமீபத்தில் இவருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விருதைப் பெறுவதற்கு முன்பே உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version