சிங்கப்பூர் டூ சென்னை..3.32 கோடி மதிப்புடைய 6.8 கி தங்கம் பறிமுதல்!

சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த 2 விமானங்களில் கடத்திவரப்பட்ட 3 கோடியே 32 லட்ச ரூபாய் மதிப்புடைய 6புள்ளி 8 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த சென்னை விமான நிலை சுங்க அதிகாரிகள், ஒரு பெண் உட்பட 3 பேரை கைது செய்தனர். சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களில், தங்க கட்டிகளை கடத்தி வருவதாக, விமான நிலைய சுங்கத்துறையினருக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சென்னையைச் சேர்ந்த 2 ஆண் பயணிகளை சோதனை செய்தனர். அப்போது அவர்களது பைகளில் இருந்த தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும் மற்றோரு விமானத்தில் வந்த மலேசியவை சேர்ந்த பெண் பயணியிடன் இருந்த 740 கிராம் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர்.

 

Exit mobile version