ராமலான் நோன்பு காலம் என்பதால் காலை ஐந்தரை மணிக்கு வாக்குப்பதிவை மாற்ற தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இஸ்லாமியர்களின் நோன்பு திறப்பு காரணமாகவும், வரும் நாட்களில் வெப்பநிலையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளதன் காரணமாகவும் வாக்குப்பதிவு நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரனையின் போது, காலை 5.30 மணிக்கே வாக்குப்பதிவை தொடங்குவது குறித்து பரிசீலிக்குமாறு தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
Discussion about this post