பத்து தல படத்திற்கு வந்த நரிக்குறவர் சமுதாயத்தினர்.. தீண்டாமை காட்டிய தியேட்டர் நிர்வாகம்.. விடியா ஆட்சியில் கேள்விக்குள்ளாகும் சமூகநீதி?

இன்று 30/03/2023 சிம்பு நடித்த பத்து தல திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியாகி இரசிகர்களின் வரவேற்பினைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னையை சேர்ந்த ரோகிணி திரையரங்கிலும் இந்த திரைப்படமானது வெளியானது. திரைப்படத்தினைக் காண்பதற்கு இரசிகர்கள் திரண்டு வந்திருந்த நிலையில் நரிக்குறவர் சமுதாயத்தினைச் சேர்ந்த இரண்டு பெண்களும் அவர்களுடன் ஒரு சிறுவனும் திரைப்படத்தினைக் காண வந்துள்ளார்கள். அவர்கள் உரிய முறையில் டிக்கெட் எடுத்துதான் உள்ளே வந்துள்ளார்கள். ஆனால் டிக்கெட் சரிபார்ப்பவர் அவர்களை உள்ளே விடமுடியாது என்று கூறியுள்ளார். பிறகு அவர்களைத் தாமதமாக உள்ளே விட்டுள்ளார்க்ள். இந்த நிகழ்வு குறித்தான கணொளிப் பதிவு சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் விடியா திமுக அரசின் தலைவர் ஸ்டாலின் நரிக்குறவர் சமுதாயத்தினரின் வீடுகளுக்கு சென்று உணவு உண்ணவெல்லாம் செய்கிறார். ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் அச்சமுதாயத்தினர் மீது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதை அவர் கண்டுகொள்ள மறுக்கிறார். இதுதான் திமுகவின் சமூக நீதியா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். முதலில் அவர்களை உள்ளே விடக்கூடாது என்று தோன்றிய எண்ணமே தவறு என்று இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை எழுதியுள்ளார். கலைகள் அனைவருக்கும் சொந்தமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version