அவருக்கென்ன ஏதும் பிரச்சினையா? நல்ல சைக்காட்ரிஸ்ட் கிட்ட கூட்டிட்டு போகலாம்ல.. ஆமாங்க இந்த பேசியே பிரச்சினைய தீர்க்க முடியும்னு நம்பிகிட்டு கவுன்சிலிங் கொடுக்குறேன்னு கடை போட்டருக்குற அடுத்த தெரு சைக்காட்ரிஸ்ட்கள் தவறாமல் தங்கள் மருத்துவமனைகளில் ஒரு தாத்தா படத்தை தொங்க விட்டுருப்பாங்க பாத்திருக்கிங்களா… ஒருவேளை இல்லைன்னா இனிமேல் நோட் பண்ணுங்க.. இவருதான் அது.
பேரு சிக்மண்ட் ஃப்ராய்ட்டு (Sigmund Freud). ஆமா வாயில நுழையாதமாதிரி பேரு வச்சுருக்குறதுனால இவரு ஏதோ வெளிநாட்டு பெரியா ஆளாத்தான் இருப்பாருன்னு முடிவுக்கு வந்துருப்போம். ஆமா ஐரோப்பாவின் ஆஸ்திரிய நாடுதான் சாரோட பூர்வீகம். (தற்போது செக் குடியரசில் உள்ளது. முன்னர் ஆஸ்திரியப் பேரரசின் அடங்கியிருந்ததுமான, மொரேவியாவில் இருந்த பிரிபார் என்னும் இடம் .) வணிக குடும்பம் என்பதால் ஆரம்பத்தில் போஷாக்காகதான் வாழ்ந்தார். அதே சமயம் வணிகக் குடும்பம் என்பதால்தான் வறுமையின் பிடியிலும் சிக்கிக்கொண்டார்.
சட்டம் படிக்க ஆசைப்பட்டு மருத்துவம் படிக்கப்போய் (அய்யய்யோ) டார்வினியத்தில் ஈடுபாடு கொண்ட கார்ல் கிளாஸ் (Karl Claus) என்பவரிடம் மருத்துவம் படித்தார். நரம்பியல், மெய்யியல் (தத்துவம் ) , உளவியல் (சைக்காலஜி) , உளமருத்துவம், உளப்பிணிச் சிகிச்சை, உளப்பகுப்பாய்வு என தனியே ஒரு மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையே திறக்குமளவுக்கு பல பிரிவுகளில் கற்றுத் தேர்ந்தார்.
1874 ஆம் ஆண்டில் உள இயக்கவியல் என்னும் கருத்துருவை, ஜெர்மானிய உலற்கூற்றியலாளரான ஏர்ண்ஸ்ட் வில்ஹெல்ம் வொன் புரூக் (Ernst Wilhelm von Brücke) என்பவர் தனது உடற்கூற்றியல் விரிவுரைகள் என்னும் வெளியீட்டில் அறிமுகப்படுத்தினார். அப்போ நம்ம ஆளுக்கு வயது வெறும் 18 தான்.
பின்னாளில் அதாவது 1885 ம் ஆண்டுவாக்கில் சார்கோட் உளக்கூறு நோயாளிகளிடம் காணப்படும் விகாரமான உடல் வெளிப்பாடு (ஹிஸ்டீரியா) பற்றிய ஆய்வு மற்றும் அறிதுயில் (உறங்கும்போதும் மனம் விழிப்பில் இருக்கும் நிலை) நிலையை ஏற்கும் திறன் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றார். மேடையில் அடிக்கடி நோயாளிகளுடன் நடத்திய செயல்முறை விளக்கங்கள் மூலம் இது அப்போதே நிரூபிக்கப்பட்டது.
1886ல் இதை நேரடியாக மருத்துவத்தில் களமிறக்க திட்டமிட்டார். அதன்படி “அன்னா ஓ” என்பவர் அறிதுயில் நிலையில் உள்ள போது தனது நோய்க்குறிகளைப் பற்றிக் கூறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். இந்த முறையின் படி பேசும் போது நோய்க்குறிகள் தீவிரத்தன்மையிலிருந்து குறைய ஆரம்பித்தது.
மேலும், அதிர்ச்சிகரமான சம்பவங்களோடு தொடர்புடைய நினைவுகளையெல்லாம் மீட்கவும் முடிந்தது. பிராய்டின் இந்த மருத்துவப் பரிசோதனைகள் முன்பிருந்த அறிதுயில்நிலை (ஹிப்னாடிசம்) சிகிச்சையுடன் ஒப்பிடும் போது, நோயாளியை எந்தவிதமான தணிக்கையோ, தடுப்போ இல்லாமல், தனது நினைவில் தோன்றக்கூடிய எண்ணங்களைப் பற்றியெல்லாம் சுதந்திரமாகப் பேசுவதற்கு ஊக்குவிப்பதன் மூலம் நோய்க்குறிகளில் இருந்து முன்பைவிட மேம்பட்ட நிவாரணம் கிடைக்கிறது என்பதை கண்டறிந்தார். அதாவது, எப்படி பேசிப்பேசியே திராவிடகட்சிகள் ஆட்சியை பிடித்தனவோ, அதுபோல பேசிப்பேசியே நோயை விரட்டிவிட்டாராம். எப்படி கண்டுபிடிப்பு பாத்தீங்களா?
1896 ஆம் ஆண்டில், அறிதுயில் நிலை என்பதை பிராய்டு கைவிட்டார். மேலும், அறிதுயில்நிலையுடன் கூடிய தனது புதிய மருத்துவமுறை மற்றும் அதன் கோட்பாடுகளை குறிக்க “உளப்பகுப்பாய்வு” என்று அதற்கு பெயர்சூட்டுவிழா நடத்தினார்.
இவர் கண்டுபிடித்தவைகளில் 1986 ஏப்ரல் 21ம் தேதி இவர் வெளியிட்ட Freud’s seduction theory மருத்துவ உலகம் மண்டையை பிய்த்துக்கொள்ளக் காரணமாக அமைந்தது என்றும் சொல்லலாம். அப்படி என்ன சொன்னார் தெரியுமா?
மனிதன் தவறிழைக்க தூண்டுவது எது என்பதற்கு இவர் கண்டுபிடித்த காரணக் கொள்கைதான் அது.
அதாவது, “தொடக்க கால குழந்தைப் பருவத்து பாலியல் தொல்லைகள் உளவழி நரம்பு நோயின் (psychoneuroses)முன் நிபந்தனையாக இருக்கலாம்” என்று தனது தவறிழைக்கத் துாண்டப்படுதல் கொள்கையின் (Freud’s seduction theory) கோட்பாடாக முன்வைத்தார் (ரைட்டு…)
இப்படித்தான் உலகம் நம்பமுடியாத பலவற்றை உள்ளத்தோடு பேசி நிகழ்த்திக்காட்டினான் இந்த உளவியலின் தந்தை சிக்மண்ட் ஃப்ராய்டு. கடைசி வரை அறிவியலாளர்கள் ஏற்றுக்கொள்ளாத தன் அறிவுப்பூர்வமான உளவியல் முடிவுகளை இந்த உலகம் தன் இறப்புக்குப்பின் ஏற்றுக்கொள்ளும் என்று இவர் உள்ளுணர்வு சொன்னது. அதன்படியே உலகம் அதை ஏற்றுக்கொண்டது.
1856 ஆண்டு மே 6ம் தேதி இதே நாளில் தான் பிறந்தான் இந்த வியப்பூட்டும் வித்தைக்காரன். 163 வது பிறந்தநாள் வாழ்த்துகள் சிக்மண்ட் ஃப்ராய்ட்..
Discussion about this post