எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்தால், ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் பிரதமராக இருப்பார்கள் என்று பாஜக தலைவர் அமித் ஷா கிண்டலாக தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் கான்பூரில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு பேசிய அமித்ஷா, அகிலேஷ் மற்றும் மாயாவதியின் கூட்டணி ஊழல் கூட்டணி என்றும் அவர்கள் சாதி அரசியல் மட்டுமே செய்து வருவதாகவும் விமர்சித்தார்.
மோடியால் மட்டுமே நிலையான ஆட்சி தர முடியும் என குறிப்பிட்ட அமித் ஷா, எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்தால், திங்கட்கிழமை மாயாவதியும், செய்வாயன்று அகிலேசும், புதனன்று மம்தாவும் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் பிரதமராக செயல்படுவார்கள் என விமர்சித்தார்.
Discussion about this post