விடியா திமுக அரசு ஆட்சி அமைத்து 20 மாதங்களில் ஆவின் பொருட்களின் விலையை அவ்வப்போது உயர்த்தி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆரஞ்ச் நிற பால் பாக்கெட்டை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தியது. இதையடுத்து, ஏழை,எளிய மக்கள் வாங்கும் பச்சை நிற பால் பாக்கெட்டின் விலையை நவீன முறையில் உயர்த்தியுள்ளது. வழக்கமாக பச்சைநிற ஆவின் பாலில் 4.5 சதவீத கொழுப்பு சத்தும், 8.5 சதவீத இதரசத்துக்களும் இருந்த நிலையில், இன்று முதல் 3.5 சதவீதம் மட்டுமே கொழுப்புச்சத்து இருக்கும் என்றும், விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் மக்களுக்கு வழங்கும் பாலின் தரம் குறைவதோடு, ஒரு சதவீதம் கொழுப்பு சத்தை குறைத்து விடியா அரசு மறைமுகமாக மக்களை ஏமாற்றி வருவது அம்பலமாகி உள்ளது.
Discussion about this post