சிவசேனா கட்சி வைக்கும் கோரிக்கைகளை ஏற்க முடியாது: அமித் ஷா

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனா கட்சி வைக்கும் கோரிக்கைகளை ஏற்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க எந்த கட்சியும் தகுதி பெறாத நிலையில் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க தவறியதற்கான காரணத்தை அக்கட்சியின் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ஆட்சி அமைப்பதற்காக சிவசேனா கூறும் கோரிக்கைகளை ஏற்க முடியாது என தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸை முன்நிறுத்தியே பாஜக தேர்தலை சந்தித்ததை அறிந்த சிவசேனா, தற்போது புதிய கோரிக்கையுடன் சிக்கல் ஏற்படுத்துவதை எப்படி ஏற்க முடியும் என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து பேசிய அவர், எல்லாம் தெரிந்தும் சிவசேனா இதுபோன்று நடவடிக்கையில் ஈடுபடுவது வேடிக்கையாக உள்ளது என கருத்து தெரிவித்தார்.

Exit mobile version