புழல் அருகே வீட்டில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 2தொழிலாளர்கள் பலி கழிவு நீர் தொட்டியில் மயங்கிய இரண்டு தொழிலாளர்களை தீயணைப்பு வீரர்கள் சடலமாக மீட்டனர்.
சென்னை புழல் அடுத்த காவாங்கரை குருசாந்தி நகர் பகுதியில் வசித்து வருபவர்கள் ராஜேந்திரன் – நிர்மலா. இவர்களின் வீட்டின் கழிவுநீர் தொட்டியை செய்வதற்கு பாஸ்கரன், கணேசன் என்ற இரண்டு தொழிலாளர்கள் இன்று வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் வீட்டில் இருந்த கழிவு நீர் தொட்டி மூடியை திறந்து சுத்தம் செய்வதற்காக உள்ளே இறங்கியுள்ளனர். கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்த போது திடீரென இருவருக்கும் விஷவாயு தாக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளனர். நீண்ட நேரமாக வெளியே வராததை கண்டு புழல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில் செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கழிவுநீர் தொட்டியில் மயங்கிய நிலையில் கிடந்த 2தொழிலாளர்களின் சடலத்தை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து புழல் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Discussion about this post