metoo என்ற ஹேஸ்டேக் மூலம் பெண்கள் தங்களுக்கு எதிராக நடைபெற்ற பாலியல் அத்துமீறல்களை வெளியே கூறி வருகின்றனர்.
குறிப்பாக திரையுலகில் பெரும்புள்ளிகளின் பெயர்கள் அடிபட்டு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பாலிவுட் நடிகையான ஷில்பா ஷிண்டே கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
metoo ஹேஸ்டேக்கால் எதுவும் நடக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இதுபோன்ற பாலியல் அத்துமீறல்கள் நடைபெறத்தான் செய்யும் என தெரிவித்துள்ளார்.
சினிமா துறையை போன்று அனைத்து துறைகளிலும் இதுபோன்ற பாலியல் அத்துமீறல்கள் நடைபெறும் போது, திரைத்துறையை சேர்ந்தவர்கள் தங்கள் துறையைச் சேர்ந்தவர்களின் பெயரை வெளியிடுவதால் அந்த துறைக்குத் தான் கெட்ட பெயர் எனத் தெரிவித்துள்ளார்.
சினிமா துறையில் யாரும் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதில்லை என்றும், பெண்களின் விருப்பத்தின் பேரிலேயே அனைத்தும் நடைபெறுகிறது என்றும் சர்ச்சைக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
அத்துமீறல் நடைபெறும் போது கூறாமல், நீண்ட நாட்களுக்கு பிறகு கூறுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதில் வேடிக்கை என்னவென்றால் ஷில்பா ஷிண்டே கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பட தயாரிப்பாளர் மீது பாலியல் புகார் எழுப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post