மே.இ.தீவு தொடரில் இருந்து தவான் நீக்கம்: ஒரு வழியாக இளம்வீரர் அணியில் சேர்ப்பு

மேற்கு இந்திய தீவு கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதலாவதாக 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் டிசம்பர் 6-ந் தேதியும், 2-வது போட்டி திருவனந்தபுரத்தில் 8-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி மும்பையில் 11-ந் தேதியும் நடக்கிறது.

இடதுகை பேட்ஸ்மேனான ஷிகர் தவான், இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். இந்த நிலையில், சையத் முஷ்டாக் அலி டிராபியில் விளையாடி வந்த தவான், முழங்காலில் காயம் அடைந்து போட்டியில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

இதனையடுத்து, காயம் பூரணமாக குணமடைய, அதிக நாட்கள் ஆகும் என்பதால், மேற்கு இந்திய தீவு அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகி உள்ளார். இவருக்கு பதில் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் வீரர் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Exit mobile version