சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 408 ரூபாய் குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 408 ரூபாய் குறைந்து 28 ஆயிரத்து 608 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 784 ரூபாயில் இருந்து 51 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 733 ரூபாயாகவும், ஒரு சவரன் 30 ஆயிரத்து 272 ரூபாயில் இருந்து 408 ரூபாயாக குறைந்து 29 ஆயிரத்து 864 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 29 ஆயிரத்து 16 ரூபாயாக இருந்த நிலையில், இன்று 408 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 28 ஆயிரத்து 608 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை, கிராமுக்கு 3 ஆயிரத்து 627 ரூபாயில் இருந்து 51 ரூபாய் குறைந்து, 3 ஆயிரத்து 576 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் 60 காசுகள் குறைந்து 47 ரூபாய் 40 காசுக்கும், ஒரு கிலோ வெள்ளி ஆயிரத்து 600 ரூபாய் குறைந்து 47 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Exit mobile version