நடைபெற்று முடிந்த மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில், பாரதிய ஜனதா-சிவசேனா கூட்டணிக்கு அதிக இடங்களில் வெற்றி பெற்றது. எனினும், முதலமைச்சர் பதவி தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையில், தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இரு கட்சிகளும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், பாஜக மற்றும் அக்கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சிவசேனா கட்சி முற்றிலுமாக விலகினால் ஆதரவு அளிப்போம் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறியுள்ளார்.
இந்த நிலையில் சிவசேனாவிற்கு ஆதரவு தரப் போவதில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சரத் பவாரின் இந்த அறிவிப்பை பாரதிய ஜனதா கட்சி வரவேற்றுள்ளது.