பூச்சிகள் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் பருத்தியை காக்க வேளாண் துறை உதவி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சுற்றுவட்டார பகுதிகளில் வறட்சி பயிரான பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறைந்த அளவு நீர் கிடைத்தாலும் நல்ல மகசூல் கிடைக்கும் என்பதால் அதிகளவில் பருத்தியை விவசாயிகள் சாகுபடி செய்தனர். இந்தநிலையில் போதிய மழை பொழிவு இல்லாததாலும், பூச்சிகள் தாக்குதலாலும் பருத்தி செடிகள் கருகி வருகின்றன.
இதனால் கடன் பெற்று பருத்தி சாகுபடி செய்த விவசாயிகள் செய்வதறியாது திகைத்துள்ளனர். மருந்து அடித்தும் பூச்சிகள் தாக்குதல் கட்டுக்குள் வராததால் வேளாண் துறை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post