அரபிக் கடலில் உள்ள ‘மகா புயல்’ காரணமாகக் குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குஜராத் கடற்கரையில் இருந்து சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவில் அரபிக் கடலில் ‘மகா புயல்’ நிலவி வருகிறது. இது வடகிழக்குத் திசையில் நகர்ந்து வலுவிழந்து நாளை நண்பகலில் டையூ அருகே குஜராத்தில் கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மகா புயலின் தாக்கத்தால் குஜராத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், மகாராஷ்டிராவின் மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களிலும் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.