திண்டுக்கல் அருகே நிழல் வலைக்கூடம் மூலம் சோதனை முறையில் சம்பங்கியை நடவு செய்து அதிக லாபம் ஈட்டிவரும் விவசாயி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். நிழல் வலைக்கூடம் மூலம் பசுமை குடில் அமைத்து குடைமிளகாய், முட்டைகோஸ், தக்காளி போன்றவற்றை விவசாயிகள் பயிரிட்டு லாபம் ஈட்டி வருகின்றனர். இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள கோட்டைப்பட்டியை சேர்ந்த சரவணன் என்ற இளைஞர், நிழல் வலைக்கூடம் மூலம் சம்பங்கி பயிரிட்டுள்ளார்.
ஆரோக்கியமான சூழலில் வளர்க்கப்படும் சம்பங்கியால், விளைச்சல் அதிகரிக்கிறது என்றும், பூவின் எடை மற்றும் நிறமும் சந்தையில் கூடுதல் விலையை பெற்றுத் தருவதாகவும் சரவணன் கூறியுள்ளார். திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலைகழகம் மூலம் குடில் அமைக்க 95 சதவிகித மானியம் பெற்று இந்த சாதனையை தான் புரிந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால், காந்தி கிராம பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர்கள் நேரில் வந்து சரவணனின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தனர்.
Discussion about this post