சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள திமிரிகோட்டையில் சின்னசாமி மகன் முருகராஜன் என்பவர் கயிறு திரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். தேங்காய் நாரை பிரித்தெடுத்து கயிறு திரித்த பின், மீதமுள்ள கழிவுகளை தன்னுடைய விவசாய நிலத்தில் முருகராஜன் குவியல் குவியலாக கொட்டி வைத்தார்.
இந்நிலையில்,கழிவுக் குவியலின் மீது மர்ம நபர்கள் தீ வைத்ததனர். இதை கண்ட முருகராஜன் தந்தை சின்னுசாமி தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
Discussion about this post