செப்டம்பர் மாதத்தில், 102 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடமாநிலத்தில் பெய்து வரும் கன மழை, கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழை ஆகியவற்றின் எதிரொலியாக, செப்டம்பர் மாதத்தில் நாடு முழுவதும் சராசரியாக 247.1 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது வழக்கமான மழையின் அளவை விட 48 சதவீதம் அதிகம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது கடந்த 102 ஆண்டுகளில் செப்டம்பர் மாதங்களில் பெய்த மழையின் அளவை விட இது அதிகம் என கூறப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழையின் தாக்கம் அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.