2020 ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டு இந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக அங்கு அனைத்து வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் கிராமம் ஒன்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
கொரோனா தொற்றை எதிர்கொள்ளும் விதமாக செய்யப்பட்ட பல்வேறு பாதுகாப்பு வடிவங்களின் ஒட்டுமொத்த தொகுப்புதான் ஒலிம்பிக் கிராமம். பரிசோதனை செய்யப்ப்ட்ட வீரர்களுக்கான பாதுகாப்பு வளையமாக இந்த கிராமம் செயல்படும்.
206 நாடுகளைச் சேர்ந்த 11000 விளையாட்டு வீரர்கள் போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் . இதனால் ஒலிம்பிக் கிராமத்தை விட்டு வெளியே செல்லும் சூழல் வந்தாலும் அவர்கள் தினமும் பரிசோதனை செய்யப்படுவார்கள் என்றும் ஒலிம்பிக் கிராமத்தில் குடியிருப்பவர்களில் 80 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில், வீரர்கள் வரத்தொடங்க இருப்பதால் இந்த ஒலிம்பிக் கிராமம் இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்தியா சார்பாக ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் 115 வீரர் வீராங்கனைகளும் நாளை (ஜூலை 14) டோக்கியோ கிளம்புவது குறிப்பிடத்தக்கது