பிப்ரவரி 4-ம் தேதி பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடக்கம்

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடரையொட்டி நடைபெற்ற ஒத்திகையில் வண்ணமயமான வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

சீன தலைநர் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வருகிற பிப்ரவரி 4ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதே போல், குளிர்கால பாராலிம்பிக் போட்டிகள் மார்ச 4ஆம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெறுகிறது.

30 நாடுகள் பங்கேற்கும் இந்த 2 ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்கள் கொரோனா பரிசோதனைக்கு பிறகு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குளிர்கால ஒலிம்பிக் தொடங்கும் முதல் நாளான பிப்ரவரி 4ஆம் தேதி வாணவேடிக்கைகளுடன் கலைஞர்களின் நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஒத்திகை பெய்ஜிங் ஒலிம்பிக் மைதானத்தில் நடைபெற்றது.

வண்ண விளக்குகளின் அலங்காரத்தில் ஜொலித்த ஒலிம்பிக் மைதானத்தில் வானை அலங்கரிக்கும் வகையில் வாண வேடிக்கையும் நிகழ்த்தப்பட்டன. இதனால், பெய்ஜிங் ஒலிம்பிக் மைதானமே ஒளி வெள்ளத்திலும், வானவேடிக்கை ஒளியிலும் ஜொலித்தது.

Exit mobile version