கரூரில் வாக்கு சேகரிக்க சென்ற திமுக வேட்பாளரை பொதுமக்கள் கேள்விகளால் துளைத்தனர். திமுகவின் செந்தில் பாலாஜி அடியாட்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றம் மட்டும் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. திமுகவின் தேர்தல் பிரசாரம் மற்றும் ஆலோசனைக் கூட்டங்களில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. இதன் உச்சகட்டமாக வாக்களர்களை அடியாட்களை விட்டு அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் உள்ள லிங்கமநாயக்கன்பட்டியில் காங்கிரஸ் வேடபாளர் ஜோதிமணியை ஆதரித்து, திமுகவை சேர்ந்த செந்தில் பாலாஜி வாக்கு சேகரிக்க சென்றுள்ளார். அப்போது கடந்த முறை வெற்றி பெற்று தொகுதி பக்கமே வராமல், தற்போது எப்படி ஓட்டு கேட்டு வருகிறீர்கள் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த திமுக அடியாட்கள் கேள்வி கேட்டவர்களை சரமாரியாக தாக்கியதோடு, செல்போன்களை பறித்து அராஜகத்தில் ஈடுபட்டனர். ஓட்டு கேட்டு வரும் போதே வாக்களர்களை தாக்கும் திமுகவின் இச்செயல் அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் காயமடைந்த 3 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Discussion about this post