சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இலாகா இல்லாத அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு இன்றுடன் நீதிமன்ற காவல் முடிவடைவதால், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவரை நீதிபதி ரவி முன்பாக அமாலக்கத்துறையினர் ஆஜர்படுத்தினர். அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சுமார் 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜியிடம் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து செந்தில்பாலாஜிக்கும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதிவரை காவல் நீட்டிக்குமாறு சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.