சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற
காவலில் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி, துறை ஏதும் இல்லாத அமைச்சரா நீடிப்பார் என கடந்த16ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இந்த நிலையில், சிறையில் உள்ள செந்தில் பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி, அதிமுக முன்னாள் எம்.பி. ஜெ.ஜெயவர்த்தன், கொளத்தூரை சேர்ந்த எஸ்.ராமகிருஷ்ணன், ஆகியோர் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயவர்த்தன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜராகி, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கும் அதிகாரத்தை இழந்து விட்டதாகவும், அரசு ஊழியர்கள் 48 மணி நேரம் காவலில் இருந்தாலே அவர்கள் பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்து விடுகின்றனர். இந்த நிலையில், ஒரு மாதத்துக்கு மேல் நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக எப்படி நீடிக்க முடியும்? என வாதம் முன் வைக்கபட்டது. மேலும் செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ.வாக நீடிக்கலாமே தவிர, எந்த துறையும் இல்லாத அமைச்சராக நீடிக்க முடியாது என விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மணிஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் ஆகியோர் அமைச்சர்களாக நீடிக்கவில்லை என்றும், சிறையில் இருப்பவர் அமைச்சராக நீடிக்க தகுதியில்லை என்ற வழக்கு இதுவே தான் முதல்முறை என்பதையும் சுட்டிக்காட்டி பேசிய ஜெயவர்த்தன் தரப்பு மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, இதுபோன்ற வழக்கு வேறு எந்த நீதிமன்றத்திலும் விசாரிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பு சட்டப் பிரிவு163 ஆளுநருக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின்படி, செந்தில்பாலாஜி பதவியில் நீடிப்பதை ஏற்க முடியாது என ஆளுநர் கூறியிருக்கின்ற நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க தகுதியில்லை என அறிவிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதாகவும் வாதிட்டுள்ளார். அதிமுக முன்னாள் எம்,பி ஜெயவர்த்தன் தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள், தமிழக அரசுத் தரப்பு வாதத்துக்காக வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
Discussion about this post