அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை தமிழக முதல்வர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இல்லையென்றால் ஆளுநர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை அரசியல் சாயம் பூசாமல் சட்ட நடவடிக்கையாகத்தான் பார்க்க வேண்டும். அதனை சட்டப்படி எதிர்கொள்ள வேண்டுமே தவிர நாடகம் போட கூடாது.
எய்ம்ஸ் மருத்துவர்களை கொண்டு செந்தில் பாலாஜியின் உடலை பரிசோதனை செய்ய வேண்டும். சட்டப்படி முறையாக விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.
சென்னை பட்டினபாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்படும்போது நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அது குறித்து செய்தியாளர்களை சந்தித்தார்.
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற பழமொழிக்கேற்றவாறு நேற்று இரவு செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கடந்த இரண்டு ஆண்டு திமுக ஆட்சியில் கோடிக்கணக்கான ரூபாய்களை சம்பாதித்துள்ளார். தமிழக முழுவதும் சட்டவிரோதம் மதுபான கூடங்களை 24 மணி நேரமும் நடத்தி பணம் சம்பாதித்துள்ளார். ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் கூடுதலாக 10 ரூபாய் வைத்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார். அவருக்கு பேரே 10 ரூபாய் பாலாஜி என மாறிவிட்டது.
அண்ணா நகர் மோகன் வீட்டில் சோதனை நடைபெற்ற போது முதல்வர் ஏன் அமைதியாக இருந்தார் அப்போது ஏன் எதுவும் சொல்லவில்லை ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது என்றவுடன் மட்டும் ஏன் நள்ளிரவில் ஆலோசனை செய்கிறார். முதல்வரின் குடும்பம் பற்றிய அனைத்து தகவல்களும் செந்தில் பாலாஜிக்கு தெரியும் அதனால் தான் அவரை பாதுகாக்க துடிக்கிறார்.
நேற்று காலை நலமாக நடைபயிற்சி மேற்கொண்டவர் நள்ளிரவில் நெஞ்சுவலி என்று கூறுகிறார்.நெஞ்சு வலியின் போது காவல்துறையினரை காலால் எட்டி உதைக்கிறார். நெஞ்சுவலியால் துடிப்பவர் எப்படி காவல்துறையினரை காலால் எட்டி உதைக்க முடியும் காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
நேற்று காலை சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே சோதனைக்கு ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாக கூறினார் ஆனால் இரவு கைது செய்யும் நேரத்தில் நெஞ்சு வலி என கூறியது ஏன்?
அமலாக்கத்துறை விசாரணையில் இருக்கும் நபரை முதலமைச்சர் எப்படி சந்திக்க முடியும்?
அரசியல் பழிவாங்கும் நிகழ்வாக செந்தில் பாலாஜி கைதை பார்க்க கூடாது செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு அரசியல் சாயம் பூசக்கூடாது சட்டம் தன் கடமையை செய்து கொண்டிருக்கிறது சட்டப்படி தான் எதிர் கொள்ள வேண்டும். சட்டப்படி எதிர்கொள்ள திறன் இல்லாமல் நாடகம் போடக்கூடாது.
எய்ம்ஸ் மருத்துவர்களைக் கொண்டு செந்தில் பாலாஜியின் உடலை பரிசோதனை செய்ய வேண்டும் சட்டப்படி கடமையை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள மருத்துவர்கள் அரசிற்கு சாதகமாக செயல்பட்டால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவர்கள் விருப்பு வெறுப்பின்றி நேர்மையாக பணியாற்ற வேண்டும்.
2015 ஆம் ஆண்டு தனிப்பட்ட முறையில் ஊழல் புகாரில் சிக்கினார். அன்றைய முதல்வர் புரட்சித்தலைவி அம்மா செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்தார்.
உடனடியாக தமிழக முதல்வர் ஸ்டாலின் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் இல்லையேல் ஆளுநர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
Discussion about this post