செந்தில்பாலாஜி பதவி பறிப்பு! மதுவுக்கு முத்துச்சாமி! கரண்ட்டுக்கு தென்னரசு!

அமைச்சர் செந்தில்பாலாஜி கைதானத் தொடர்ந்து அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு அமைச்சர் முத்துச்சாமிக்கும் அமைச்சர் தங்கம் தென்னரசிற்கும் செந்தில்பாலாஜியின் துறைகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்டாலின் பொறுபேற்றதிலிருந்து திமுகவின் அமைச்சரவை நான்கு முறை மாறியுள்ளது. இது தமிழக அரசியல் வரலாற்றிலேயே நடக்காத ஒன்று.

நேற்று அமலாக்கத்துறையினர் தவறான முறையில் சொத்து சேர்த்ததற்காக செந்தில்பாலாஜியைக் கைது செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து நெஞ்சுவலி நாடகம், மருத்துவமனையில் அமைச்சரவைக் கூட்டம் என ஒரு பெரிய திரைப்படத்திற்கான ஒத்திகைகளே நடந்துகொண்டிருந்தது. பிறகு நீதிமன்றக் காவலில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார் செந்தில்பாலாஜி. மேலும் நீதிமன்றக் காவலில் இருந்து தன்னை விடுவிக்கும்படி அவர் அளித்த மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டதினையொட்டி தற்போது அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version