கரூரில் வேட்பு மனுத்தாக்கலுக்கு தாமதமாக வந்த செந்தில் பாலாஜியை தடுத்த காவலர்களை அவர் தாக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் இன்று வேட்புமனு தாக்கல் சென்றார். ஆனால் அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலம் வந்து விட்ட நிலையில் செந்தில் பாலாஜி நீண்ட நேரம் வரவில்லை. இதனால் செந்தில் பாலாஜிக்காக ஜோதிமணி காத்திருந்தார். ஒருகட்டத்தில் தேர்தல் அலுவலர் ஒதுக்கிய நேரம் கடந்த பின்னர் செந்தில் பாலாஜி வந்தார். அப்போது கரூர் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை வேட்பு மனு செய்ய நேரம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தம்பிதுரைக்கு வழங்கப்பட்டிருந்த நேரத்தில் தங்களை அனுமதிக்க வலியுறுத்தி செந்தில் பாலாஜியும் ஜோதிமணியும் ரகளை செய்தனர். மேலும் தடுக்க வந்த காவலர்களை செந்தில் பாலாஜி பணி செய்ய விடாமல் தாக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
Discussion about this post