செந்தில் பாலாஜியின் சிறைக் கைதிகளுக்கான பதிவு எண் : 001440

நீதிமன்றக் காவலில் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறை கைதிகளுக்கான பதிவேடு எண் கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கான சிறைக்கைதிக்கான பதிவேடு எண் 001440 என்கிற எண் வழங்கப்பட்டுள்ளது. சிறைக் கைதிகளுக்கு உள்ள விதிமுறைகள் செந்தில் பாலாஜிக்கும் பொருந்தும் என்று சொல்லப்பட்டுள்ளது. மேலும் செந்தில்பாலாஜியை குடும்பத்தினரைத் தவிர வேறு யாரும் பார்க்க அனுமதி இல்லை. அப்படி பார்க்கவேண்டும் என நேர்ந்தால் நீதிபதியின் ஒப்புதல் பெற்ற பிறகே பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்படும். ஆனால் காலையிலேயே அமைச்சர் சேகர்பாபு ஓமந்தூரார் மருத்துவமனைக்கு சென்று அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்த்து வந்துள்ளார். அனுமதி பெற்றுதான் அமைச்சர் சேகர்பாபு செந்தில் பாலாஜியை பார்த்தாரா என்பது கேள்விக்குறியே!
YouTube video player

Exit mobile version