செ.பாலாஜியை நீக்கினால் ஆட்சி கவிழ்ந்துவிடும்..அச்சத்தில் ஸ்டாலின் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

*செந்தில் பாலாஜியை நீக்கினால் ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற பயத்தில் முதல்வர்
மு க ஸ்டாலின் இருக்கிறார்*

**அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து தூக்குவதற்கு
முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு தில்லு திராணி தைரியம் இருக்கிறதா என அதிமுக
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி?
*
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மதுரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறவிருக்கும் எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ள
தீர்மானங்களை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக
முன்னாள் அமைச்சர் பொன்னையன் தலைமையில், ஜெயக்குமார். பெஞ்சமின். செம்மலை உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் தீர்மானங்களை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது,

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..

மதுரையில் ஆகஸ்ட் மாதம் இருபதாம் தேதி நடைபெறவிருக்கும் எழுச்சி மாநாட்டை
நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்களை குறித்து விவாதிக்கப்பட்டது, இந்த எழுச்சி மாநாட்டில் லட்சக்கணக்கான மக்கள் வந்து பங்கேற்க வேண்டும் என்று
முன்னாள் அமைச்சர் பொன்னியின் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்து அதை
குறித்தும் தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டது, முக்கியமாக திமுக ஆட்சியுடைய அவல நிலைகள் குறித்தும், ஏழை எளிய மக்கள் தொழிலாளர்கள் மீனவர்கள் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் தேர்தல் களத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பட்சத்தில், அனைத்தும் தெரிய வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்பட்டுள்ள ஏ1 சிறையில் அதிகாரிகள் சென்று
அவருக்கு சலுட் அடித்து வருகிறார்கள், இதை பார்க்கும்பொழுது ஜெயிலில் அவருக்கு
வசந்த மாளிகை போல உருவாக்கி கொடுத்திருக்கிறார்கள்,

சிறை விதிகளை மீறி செந்தில் பாலாஜிக்கு வசதி கொடுத்திருக்கிறார்கள் என்று
சொன்னால், அமலாக்கத்துறை இதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறைக்கு சென்ற செந்தில் பாலாஜி பாதுகாக்க காரணம் என்ன,?

இதைக் குறித்து ஆளுநரிடம் அனைத்திந்திய அண்ணா திராவிடம் சார்பாக மனு
அளிக்கப்பட்டுள்ளது,

அமைச்சர் பொறுப்பில் இருந்து செந்தில் பாலாஜி விடுவிக்க திராணி தெம்பு தைரியம்
ஸ்டாலினுக்கு இருக்கிறதா, செந்தில் பாலாஜியை நிகினல் ஆட்சி போய்விடும், ஆட்சி
போய்விடும் என்ற பயத்தில் காரணமாக தான் இன்னும் நீக்காமல் ஒட்டிக்
கொண்டிருக்கிறார் ஸ்டாலின்,

2 கோடி 15லட்ச குடும்ப அட்டைதாரர்களுக்கு அறிவித்தபடி மாதம்தோறும் ஆயிரம்
ரூபாய் வழங்காமல் ஆயிரம் ரூபாய் வாங்குவதற்கு 1008 விதிகளை வைப்பது இந்த விடியா மூஞ்சி அரசாங்கம் தான், தகுதி உள்ள குடும்பத் தலைவிகள் பெற முடியாதவர்கள் நிச்சயமாக அவர்களது கோபம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்,

உலக நாடுகளில் யாரும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு இனத்தனமான செயல் மணிப்பூர் நாட்டில் நடை பெருவது, மத்திய அரசு பொருத்தவரை உடனடியாக தலையிட்டு சுமுகமாக பிரச்சனையை தீர்க்க வேண்டும், காலம் தாழ்த்தாமல் மாநில அரசுக்கு குற்றம் செய்தவர்களுக்கு சீக்கிரமாக தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும், இனத்தனமானகொடுமையான காட்டுமிராண்டித்தனமான சம்பவத்தை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துக்கொள்ள வேண்டும், அவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டும்,

பொன்முடி ஒரு இன்ஜினையே வைத்திருக்கிறார் ஆனால் அதில் ஒரு பகுதி நிலக்கரி போல் சுரண்டி எடுத்தது தான் அமலாக்கத்துறை, இன்னும் அவருக்கு உள்ள சொத்துகளில் இது ஒரு சதவீதம் கூட வராது இன்னும் அவருக்கு 99% சொதுக்கள் உள்ளது,

கால் சென்டரில் வரும் ஓசையை போல் யூ ஆர் இன் க்யூ என்று திமுகவில் உள்ள
அமைச்சர்கள் அனைவரும் வரிசையில் நிற்கின்றார்கள், அதிமுக காலத்தில் பதவிக்கு கூட கவலைப்படாமல் தண்ணீருக்காக கர்நாடகா பதவியை விட்டுக் கொடுத்தோம், ஸ்டாலினுக்கு அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை பதவி முக்கியம் அவர்களின் கேள்வி கேட்க தைரியம் இல்லை, ஸ்டாலின் அவரது அப்பாவின் வழியே கடைபிடிக்கிறார், அவர் காலத்தில் மூன்று தடுப்பணைகள் கட்டப்பட்டது, இவரது நடவடிக்கையான தமிழகமே தண்ணி இல்லாமல் வறண்ட காடாக மாறி உள்ளது தமிழகம்.

Exit mobile version