அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரான கோகுல்ராஜ் என்பவரது வீட்டில் 3 நாளாக வருமானவரித் துறையினர் விடிய விடிய நடத்தி வந்த சோதனை நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது.
தமிழகத்தின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருக்கக்கூடிய செந்தில் பாலாஜி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பதாகவும், டாஸ்மாக் கடைகளில் பாட்டில் ஒன்றுக்கு பத்து ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலித்து அதன் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாயை சுருட்டி இருப்பதாகவும், தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய மதுபான கூட்டங்களை உரிய அனுமதி இல்லாமல் இயக்கி அதன் மூலம் விற்பனை செய்யப்பட்ட மதுபானங்களின் தொகையை சுருட்டியது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து, சென்னை, கரூர், கோவை உட்பட 40 இடங்களில் கடந்த 26 ம் தேதி முதல் வருமானவரித் துறையினர் சோதனையை தொடங்கினர். நேற்று மூன்றாவது நாளாக வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்றது. சென்னை அபிராமபுரம் மூன்றாவது தெருவில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி நெருங்கிய நண்பரான கோகுல்ராஜ் என்பவரது வீட்டில் மூன்று நாளாக விடிய விடிய வருமானவரி துறையினர் சோதனை மேற்கொண்டு நடத்தினர். கோகுல்ராஜ் சென்னை மண்டலத்துக்குட்பட்ட 900க்கும் அதிகமான மதுபான கூட்டங்களில் வசூல் ஆகும் வசூல் தொகையை ஒருங்கிணைத்து கரூர் நிறுவனங்களுக்கு கொண்டு செல்லும் பணியினை செய்து வருவதாகவும், இவரிடம் பல கோடி ரூபாய்க்கான பணப்பரிவர்த்தனை மற்றும் ஆவணங்கள் கொண்டு சென்றிருப்பதாக வருமானவரி துறையினர் தெரிகிறது.