புழல் சிறையில இருந்தவரைக்கும் சொகுசா இருந்தோம்! இப்ப ஒன்னு கிடைக்காது போலயே! அமலாக்கத்துறை அலுவலகத்தில் செ.பாலாஜிக்கு நடப்பது என்ன?

அமலாக்கத்துறை அலுவலகத்தில் என்ன நடக்கிறது?

சென்னை நுங்கம்பாக்கம் ஹடோஸ் சாலையில் செயல்பட்டு வருகிறது சாஸ்திரி பவன் அலுவலகம். இந்த அலுவலகத்தின் இரண்டாவது டவர் கட்டிடத்தில் 3,4,5,6 தளம் என நான்கு தளங்களில் அமலாக்கத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

அமலாக்க துறையின் சென்னை பிரிவு அதிகாரிகள், ஆவணங்கள், முக்கிய கோப்புகள் பல்வேறு கட்டமைப்புகளுடன் இந்த அலுவலகம் இங்கு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் விசாரணை மற்றும் கஸ்டடியில் அழைத்து வரப்படும் நபர்களை விசாரணை செய்வதற்கும் இங்கு பிரத்யேக இடம் அமலாகத்துறை அதிகாரிகளால் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வருகிற 12 தேதி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்திருந்தனர்.

அதன் அடிப்படையில் கடந்த ஏழாம் தேதி இரவு எட்டு முப்பது மணி அளவில் புழல் மத்திய சிறையில் இருந்து துப்பாக்கி ஏந்திய மத்திய படை அதிகாரிகளுடன் மூன்று வாகனங்களில் இரவு 9.15 மணிக்கு சாஸ்திரி பவன் அமைந்துள்ள இடத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கொண்டுவரப்பட்டார்.

செந்தில்பாலாஜியிடம் விசாரணை!

சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அவர்கள் கேள்வி கேட்கப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அதிகாரிகள் சுழற்சி முறையில் கேள்விகளை அவரிடம் கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே இருதய அடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள நிலையில் காலை மாலை அணி இரண்டு வேலைகளிலும் மருந்துகளை எடுத்துக் கொள்வதாகவும் அவர் உடல் நிலையை தொடர்ந்து கண்காணிக்க பகல் மற்றும் இரவு நேரங்களில் இரண்டு இ எஸ் ஐ மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் BB மற்றும் PULSE ஆகியவை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடரும் விசாரணை..!

செந்தில்பாலாஜியின் உடல் நலத்தை கவனித்துக் கொள்ள இரண்டு செவிலியர்கள் பணியில் இருப்பதாகவும் அவர்கள் தான் கண்காணித்து மேற்கொண்டு மருந்துகளை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கஸ்டடி ரூம் என்று சொல்லக்கூடிய இடத்தில் தான் அமைச்சர் செந்தில் பாலாஜி தங்கவைக்கப்பட்டு உள்ளதாகவும் அவருக்கு ஒரு கட்டில் மெத்தை தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டு அனைத்து விதமான வசதிகளும் அவருக்கு செய்து கொடுப்பது இருப்பதாகவும் அங்கிருந்து INTROGATION என்று சொல்லக்கூடிய விசாரணை இடத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அழைத்துவரப்பட்டு விசாரணை நடந்த பின்னர் கஸ்டடி அறைக்கு அழைத்து ஓய்வெடுக்க வைக்கின்றனர். மேலும் தொடர்ச்சியாக அவரிடம் கேள்விகளை கேட்பதால் உடல்நலம் குறித்தும் அதிகாரிகள் அடிக்கடி கேட்டறிந்து அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொதுவாக, விசாரணைக்கு அழைத்து வரப்படும் நபர்கள் எவ்வாறு விசாரிக்கப்படுவார்களோ அதன் அடிப்படையிலேயே அமைச்சருக்கும் விசாரணை நடத்தி வருவதாகவும் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு உடல் நலம் கருத்தில் கொண்டும் அமலாக்கத்துறை விசாரணையை நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version