ஜுன் 13, இரவு 9.45 மணி – அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டிற்கு சென்றார்.
நள்ளிரவு 12.30 மணி – ஒரு அமலாக்கத்துறை அதிகாரி மற்றும் மத்திய பாதுகாப்பு துறை உயர் அதிகாரிகள் காரில் சென்றனர்.
நள்ளிரவு 1.18மணி – சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள செந்தில்பாலாஜி வீட்டில் 17 மணி நேரமாக நடைபெற்ற சோதனை நிறைவடைந்தது.
நள்ளிரவு 1.22 மணி – வழக்கறிஞர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் செந்தில்பாலாஜி வீட்டிற்கு வருகை தந்த நிலையில், பரபரப்பான சூழல் காணப்பட்டது.
நள்ளிரவு 1.36 மணி – அமலாக்கத்துறை நடவடிக்கை குறித்து ஸ்டாலின் அவரது வீட்டில் மூத்த அமைச்சர்களுடன் சுமார் 4 மணிநேரம் ஆலோசனை மேற்கொண்டார்.
நள்ளிரவு 1.54 மணி – அமலாக்கத்துறை வானங்கள் செந்தில்பாலாஜி வீட்டில் இருந்து புறப்பட்டது.
நள்ளிரவு 2 மணி – ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்போடு செந்தில்பாலாஜி அமலாக்கத்துறை வாகனத்தில் புறப்பட்டார்.
நள்ளிரவு 2.04 மணி – மெரினா கடற்கரை சாலை வழியாக செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.
நள்ளிரவு 2.06 மணி – திடீரென நெஞ்சுவலி எனக்கூறி காருக்குள் அலறிய அமைச்சர் செந்தில்பாலாஜி.
நள்ளிரவு 2.09 மணி – செந்தில் பாலாஜியை உடல் பரிசோதனைக்காக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
நள்ளிரவு 2.11 மணி – நெஞ்சுவலிக்குதுனு காருக்குள் உருண்டு புரண்டு அலறி, அழுது, துடித்து நாடகமாடிய செந்தில்பாலாஜி.
நள்ளிரவு 2.14 மணி – மயக்கமடைந்த நிலையில் இருந்த செந்தில் பாலாஜியை ஸ்டெச்சரில் அழைத்து சென்று ஐசியூ-வில் அனுமதித்தனர்.
அதிகாலை 3.01 மணி – விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி செந்தில்பாலாஜியை காண ஓமந்தூரார் மருத்துவமனைக்கு சென்றார்.
அதிகாலை 3.07 மணி – திமுக நிர்வாகிகளையும் மருத்துவமனையில் அனுமதிக்கக்கோரி மத்திய பாதுகாப்பு படை போலீசாருடன் அமைச்சர் உதயநிதி வாக்குவாதம்.
காலை 7 மணிக்கு மேல் திமுக அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் அதிகளவில் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வரத் தொடங்கினர்.
மருத்துவமனைக்கு திமுகவினர் படையெடுப்பை அடுத்து போலீசார் குவிப்பு.
ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பதற்றமான சூழல் நிலவுவதால், நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.