எதைக் கேட்டாலும் ஊ..கூம் என்று தலையை மட்டும் ஆட்டும் செ.பாலாஜி! தொடரும் ஐந்தாவது நாள் விசாரணை!

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இன்று ஐந்தாவது நாளாக அமலாக்க துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காலை 10 மணிக்கு தொடங்கிய விசாரணையில் அவரது மனைவியை பெயரில் வாங்கி குவிக்கப்பட்டுள்ள சொத்துக்கள் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. செந்தில் பாலாஜி வாய் பேச மறுப்பதால் அவருடைய மனைவிக்கு சம்மன் அனுப்ப இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

ஐந்தாவது நாளாக தொடரும் விசாரணை..!

உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரித்து வரும் நிலையில், ஐந்தாவது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. அமலாக்கத் துறையைச் சேர்ந்த 7அதிகாரிகள், செந்தில் பாலாஜியிடம் சுழற்சி முறையில் விசாரணை நடத்திவருகின்றனர். திங்கள்கிழமை இரவு முதல் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை நடத்தி வரும் விசாரணையில், பல்வேறு கேள்விகளை முன்வைத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, கரூரில் 9 இடங்களில் நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து தனது எந்த விவரங்களும் தெரியாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ஒரு மணி நேரத்துக்கு ஒருவர் வீதம், 3 அதிகாரிகள் சுழற்சி முறையில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணையின்போது, சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான கேள்விகள் செந்தில் பாலாஜியிடம் கேட்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், செந்தில் பாலாஜியின் மனைவியின் வங்கிக் கணக்கிலும் ரூ.2 கோடி சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள், ஏற்கெனவே அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்திருந்தனர். இந்த விவகாரம் குறித்தும் அதிகாரிகள் இன்று விசாரணை மேற்கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

மனைவியையும் விசாரிக்க முடிவு..!

அதேபோல், அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்தும் விசாரணை முழுவதும் வீடியோப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும், அமலாக்கத்துறை அதிகாரிகளின் கேள்விகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அளிக்கும் பதில்கள் அனைத்தும் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. செந்தில் பாலாஜி மனைவி மேகலாவிற்கு சொந்தமான நான்கு வங்கி கணக்குகளில் சட்ட விரோதமாக இரண்டு கோடி ரூபாய் டெபாசிட் செய்திருப்பது பற்றி அடுக்கடுக்காண கேள்விகளை செந்தில் பாலாஜியிடம் கேட்டு வருகின்றனர். தொடர்ந்து செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா வங்கி கணக்கை ஆய்வு செய்து வருகின்றனர் தேவைப்பட்டால் அவருக்கும் சம்மன் அளித்து அவரையும் நேரில் அழைத்து விசாரணை செய்வதற்கு அமலாக்கத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

Exit mobile version