செந்தில் பாலாஜியின் விவகாரம் புட்டுப் புட்டாய் வெளிவந்த பிறகுதான் தமிழ்நாட்டிற்கு அமலாக்கத்துறையென்றால் என்ன என்று தெரியவந்தது. அந்த அளவிற்கு புகழ்பெற்ற வழக்காக மாறியிருக்கிறது செந்தில்பாலாஜியின் பண மோசடி வழக்கு. இந்த பணமோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் செந்தில் பாலாஜி குறித்து பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது.
03/08/2023 அன்று பண மோசடியில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் திரு செந்தில் பாலாஜியுடன் தொடர்புடைய ஒன்பது இடங்களில் ED தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டது. சோதனையில், ரூ. 22 லட்சம் மற்றும் கணக்கில் வராத மதிப்பு ரூ. 60 காணிகளுக்கான விளக்கமறியாத சொத்து ஆவணங்களுடன் 16.6 இலட்சம் பணம் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளது.