அமைச்சர் செந்தில்பாலாஜி சொத்துகுவிப்பு வழக்கில் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்டவிரோதமாக கைது செய்ததாக ஆட்கொண்டர்வு மனுவனாது அவரது மனைவியின் பேரில் தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதிகள் நேற்று முன் தினம் இரண்டு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து தற்போது அவ்வழக்கை விசாரிக்க மூன்றாவது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயனை நியமித்து தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீதிபதிகளின் இருவேறு தீர்ப்புகள்..!
அமலாக்கத்துறை அதிகாரிகளால் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாகவும், அவரை உடனடியாக விடுவிக்கும் பொருட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை இரண்டு நீதிபதிகள் விசாரித்தனர். ஒருவர் நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி மற்றொருவர் ஜெ.நிஷா பானு ஆகும். இந்த வழக்குத் தொடர்பான தீர்ப்பினை நேற்று முன் தினம் அவர்கள் விசாரித்து தீர்ப்பினை வழங்கினார்கள். அப்போது இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கினார்கள். இதனால் நீதிமன்றத்தில் குழப்பம் நீடித்தது.
நீதிபதி நிஷா பானு…!
நீதிபதி நிஷா பானு அமலாக்கத்துறையினர் செந்தில்பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம் என்றும் அவரை நீதிமன்ற காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பினை வழங்கினார்.
நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி..!
நீதிபதி டி.பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பானது நீதிபதி நிஷா பானுவிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. ”செந்தில்பாலஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்ததில் எந்த சட்ட விரோதமும் இல்லை. அவர் 10 நாட்களுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறலாம். அதற்கு மேலும் சிகிச்சை தேவைப்பட்டால் சிறையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் தான் சிகிச்சை பெற வேண்டும்” என்றூ கூறி ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
3 வது நீதிபதி சி.வி. கார்த்திகேயன்..!
செந்தில் பாலாஜி வழக்கில் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட உத்தரவைப் பிறப்பித்ததால் நடவடிக்கை எடுக்கமுடியாமல் இழுபறி தொடர்ந்து வருகிறது. எனவே இரண்டு நீதிபதிகளைத் தவிர மூன்றாவது நீதிபதியாக ஒருவரை நியமிக்கும்படி தலைமை நீதிபதிக்கு வழக்கினை மேற்கொண்ட இரண்டு நீதிபதிகளும் பரிந்துரை செய்தனர். இதன் அடிப்படையில் தலைமை நீதிபதி, இந்த வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயனை நியமித்து உத்தரவிட்டுள்ளார். செந்தில் பாலாஜியின் மீதான ஆட்கொணர்வு மனுவை வியாழக்கிழமையான இன்று பிற்பகல் 2: 15 மணிக்கு விசாரிக்கிறார்.