செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடுத்த ஆட்கொணர்வு மனுவின் விசாரணையானது குளறுபடியாக முடிந்த நிலையில் மூன்றாவது நீதிபதி ஒருவரை நியமித்தது உயர்நீதிமன்றம். அதாவது மனுவினை விசாரித்த நீதிபதிகளான பானு மற்றும் பரத சக்கரவர்த்தி இரு மாறுபட்ட தீர்ப்பினை வழங்கினார்கள். அதாவது நீதிபதி நிஷா பானு நீதிமன்றக் காவலில் செந்தில்பாலாஜியை வைத்திருக்கக்கூடாது என்றும், நீதிபதி டி.பரதவ சக்கரவர்த்தி அமலாக்கத்துறையினர் செந்தில்பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைத்திருப்பது சரி என்று மனுவை தள்ளுபடி செய்தும் இருவேறு உத்தரவுகள் பறந்தன.
அதனைத் தொடர்ந்து இரண்டு நீதிபதிகளும் உயர்நீதிம்னற தலைமை நீதிபதியிடம் மூன்றாவது நீதிபதியை நியமிக்குமாறு பரிந்துரை செய்தனர். அதனைத் தொடர்ந்து நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். நேற்று பிற்பகல் 2:15 க்கு விசாரணைத் தொடங்கிய அவர் வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்தார். பின் இன்று தொடங்கிய வழக்கானது செவ்வாய்க் கிழமையில் விசாரிக்கப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அமலாக்கத்துறையினர் அதற்கு மறுப்பு தெரிவித்து, அன்றைக்கு தங்களுக்கு முக்கியமான வேறொரு வழக்கு உள்ளது என்று கூறினர். ஆனால் செந்தில்பாலாஜி தரப்பும் அவரது மனைவியும் வழக்கினை செவ்வாய்க்கிழமைதான் விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். ஆனால் அமலாகத்துறையினரினருக்கே சாதகமாக நீதிபதி உத்தரவுப் பிறப்பித்தார். அதன்படி வருகின்ற ஜூலை மாதம் 11 மற்றும் 2 ஆகிய தேதிகளில் செந்தில்பாலாஜியின் வழக்கானது விசாரிக்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.