அமலாக்கத்துறை சம்மனுக்கு ஆஜராகாத செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்!

கைதி செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய சம்மனுக்கு இன்றும் ஆஜராகவில்லை.

கடந்த மே மாதம் வருமான வரித்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 40 இடங்களில் சோதனை நடத்தினர் . இதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகுமாறு இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் செந்தில் பாலாஜி குறித்து விசாரிப்பதற்காக அவரது தம்பி அசோக்குமாருக்கு அமலாக்க துறையும் சம்மன் அனுப்பி இருந்தது. அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனில் கைதி செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் இன்று (20ம் தேதி) ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு அசோக்குமார் இன்றும் ஆஜராகவில்லை. அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை
ஆகிய இரண்டு விசாரணை அமைப்புகளும் அனுப்பிய சம்மன் தொடர்பாக ஆஜராகி விளக்கம் அளிப்பதற்கு அசோக்குமார் தரப்பில் சிறிது கால அவகாசம் கேட்க உள்ளனர்.

Exit mobile version