விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றியம் ஆர்.நயம்பாடி ஊராட்சியில நடந்த பூமி பூஜை நிகழ்ச்சியில அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துக்கிட்டாரு… அப்போ அங்க பழங்குடியினப் பெண் ஒருத்தங்களுக்கு சாமி வந்து ஆட ஆரம்பிச்சிருக்காங்க. அதுமட்டுமில்லாம தங்களோட பகுதிக்கு சாலை அமைச்சித் தரணும்னு கோரிக்கையும் வச்சிருக்காங்க. பொதுமக்கள் கேட்டா ஏதாவது ஒண்ண சொல்லி சமாளிக்கலாம்… சாமியே வந்து கேட்டா என்ன சொல்றதுன்னு யோசிச்ச, செஞ்சி மஸ்தான் சாலை போட்டுத் தர்றேம்மான்னு வாக்குறுதி கொடுத்துருக்காரு.
அப்படியே கன்னிமார் சாமிக்கு நான் பெரிய பக்தன்… அவங்களுக்கு கோயில் கட்டுறதுக்காக என்னோட இடத்தையே கொடுத்துருக்கேன்னுல்லாம் யாரும் கேக்காமயே விளம்பரப்படுத்திக்கிட்டாரு… எல்லாம் சரிதான்… தேர்தல் வாக்குறுதி மாதிரி, அம்மனுக்கு கொடுத்த வாக்குறுதியையும் செய்யாம விடலாம்னு நெனைச்சிடாதீங்க… ஏற்கனவே கள்ளச்சாராய விவகாரத்துல உங்க பதவி காலியாக இருந்துச்சு… இப்ப ரோடு போடலன்னா நிச்சயமா அது காலியாயிடும்னு நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.
Discussion about this post