திமுக அமைச்சரவையில சிறுபான்மை நலத்துறை அமைச்சரா இருக்குற செஞ்சி மஸ்தான் மேல நிறைய புகார்கள் இருக்குது… கள்ளச்சாராய வியாபாரி மஸ்தானோட தொடர்புல இருந்தது, வக்பு போர்டு இடத்த ஆக்கிரமிச்சது, லட்சக்கணக்குல பணத்த வாங்கிகிட்டு கிராம உதவியாளர்கள் வேல கொடுத்தது, அதே மாதிரி மரக்காணம் பெருந்தலைவர் பதவிக்கு பணம் வாங்கிட்டு பதவி கொடுத்ததுன்னு அடுக்கிக்கிட்டே போறாங்க…
இத்தன குற்றச்சாட்டு இருந்தும் மஸ்தான் மேல திமுக தலைமை ஏன் நடவடிக்கை எடுக்கலன்னா, அது மஸ்தான் தன்னோட புருவ முடிக்கும் மீசைக்கும் போட்டிருக்கிற மைதான் காரணம்னு திமுக காரங்க சொல்றாங்க.
ஏர்வாடியில் தயாரிக்கப்படும் வசீகர மையத்தான் புருவத்துலயும் மீசையிலயும் தடவிக்கிட்டு, எல்லோரையும் வசியம் செய்றதாவும் பேசிக்கிறாங்க… அவர் வச்சிருக்கிறது மையோ அல்லது அடிச்சிக்கிட்டது டையோ…
கூடிய சீக்கிரம் வருமான வரித்துறையோ அமலாக்கத்துறையோ ரெய்டு அடிச்சா, அவர் செஞ்சி மஸ்தானா அல்லது வித்த காட்டுற மோடி மஸ்தானான்னு தெரியும்னு நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.
Discussion about this post