ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் மகளிர் தினத்தையொட்டி அதிமுக முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் அவரது இல்லத்தில் வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பாக மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் வாழ்த்துக்களை கழக உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோபிசெட்டிபாளையம் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார். பின்னர் மகளிர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.இதை தொடர்ந்து, கோபி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காசிபாளையம் மற்றும் டி.என்.பாளையம்
பகுதிகளில் நடைபெறவுள்ள 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பூமி பூஜையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.
((
))
(( NWS_080323_FTP_ERD_04_EXMINISTER_MLA_NEWS. ))